முடங்கியது IRCTC இணையதளம்: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி..!
செவ்வாய், 25 ஜூலை 2023 (11:42 IST)
இன்று காலை முதல் IRCTC இணையதளம் முடங்கியதால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக IRCTC இணையதளத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக 11 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்
இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக IRCTC இணையதளம் முடங்கியதை அடுத்து ரயில் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் உள்ளனர். இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்