பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு !

சனி, 14 மார்ச் 2020 (19:51 IST)
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு !

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ள நிலையில் சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சியால் எழும் லாபங்கள் அனைத்தும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வரையிலான காலகட்டத்தில் சுமார் 39 ஆயிரம் கோடியை கூடுதல் வருவாய் அரசுக்குக் கிடைத்தது.
 
அதன் அடிப்படையில், மத்திய அரசு மறைமுகவரி மற்றும் சுங்க வரி வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ.8 ஆகவும், டீசல் ரூ.2லிருந்து ரு.4 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
மேலும், சாலை வரிகள் மீதான பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி  வரி 10 ரூபாய் ஆனது.
 
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.22.98, டீசல் ரூ.18.83 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்