பிறர் வங்கிக் கணக்கில் டெபாசிட்: 7 ஆண்டு ஜெயில், வருமான வரித்துறை எச்சரிக்கை!!
திங்கள், 21 நவம்பர் 2016 (09:30 IST)
பிறருடைய வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தால் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
கணக்கில் வராத பணத்தை பிறருடைய கணக்குகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தால் 7 ஆண்டு சிறை என அறிவித்துள்ளது. புதிய பினாமி பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதுவரை, கிட்டத்தட்ட ரூ. 200 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 30 ரெய்டுகள், 80 ஆய்வுகள் மூலமாக இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதில் 50 கோடி ரூபாய்ப் பணம் கடந்த நவம்பர் 8ம் தேதிக்குப் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதனால் நவம்பர் 1ம் தேதி முதல் பினாமி பணப் பரிவர்த்தனை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது.
இதைதொடர்ந்து கணக்கில் வராத பிறரது வங்கிக் கணக்குகளில் கொண்டு போய் முதலீடு செய்தால் கடும் நடவடிக்கையில் சிக்க நேரிடும் என வருமான வரிதுறை அடுத்த அதிரடியை காட்டி உள்ளது.