இந்த விவகாரத்தில் முதல்வர் உம்மன்சாண்டிக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறின. மேலும் சரிதா நாயரின் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்த போது, முதல்வர் உம்மன் சாண்டிக்கும் பங்கு உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தன்னை கேரள அரசியல் பிரமுகர்கள் மிரட்டி கற்பழித்தார்கள் என்றும், அவர்களை பற்றிய தகவல்களை வெளியிட்டால் கேரள அரசியலில் பெரும் பூகம்பம் ஏற்படும்” என்று பீதியை கிளப்பியிருந்தார் சரிதா நாயர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சரிதாநாயர் கூறியபோது, விசாரணை கமிஷன் முன்பு நான் தற்போது தாக்கல் செய்துள்ள ஆதாரங்கள் மூலம் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தண்டனை பெறுவது உறுதி. சோலார் பேனல் மோசடி உள்பட பல நில மோசடிகளிலும் உம்மன்சாண்டிக்கு இடைத்தரகராக செயல்பட்டு உள்ளேன். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் உம்மன்சாண்டி மீண்டும் வெற்றிபெற்றால் என்னையும், என் குடும்பத்தையும் அவர் அழித்து விடுவார் என்று கூறினார்.