உங்க ரயில் எந்திரமும் வேணாம்! – இந்தியாவின் தடையால் அதிர்ச்சியில் சீன நிறுவனம்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (12:21 IST)
இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரயில் எஞ்சின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டிருப்பது சீனாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறையிலும் சீனாவின் பங்களிப்பு தடை செய்யப்படுவதாய் அறிவிக்கப்பட்டது. இப்படியாக பல துறைகளில் சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டு வரும் இந்தியா தற்போது ரயில்வேயிலும் சீனாவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது.

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களுக்கான 18 வகையான எஞ்சின் உதிரி பாகங்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டன. பல இந்திய நிறுவனங்களும் கலந்து கொண்ட ஒப்பந்த கோரலில் யாங்ஜி என்ற சீன நிறுவனமும் கலந்து கொண்டு குறைவான ஒப்பந்த புள்ளிகள் அளித்து டெண்டரை எடுத்திருந்தது, இந்நிலையில் தற்போது சீன நிறுவனங்களுக்கு தொடரும் தடையால் சீன நிறுவனத்துடனான உதிரி பாக ஒப்பந்தத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடரும் தடைகளால் சீன நிறுவனங்கள் பல அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்