உம்மன்சாண்டி வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் போவேன் : சரிதாநாயர் வாக்கு மூலம்

சனி, 6 பிப்ரவரி 2016 (12:25 IST)
கேரள முதல்வர் உம்மன் சாண்டி வீட்டிற்கு செல்ல எனக்கு எல்லா சுதந்திரமும் இருந்தது என்று நடிகை சரிதாநாயர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


 
 
கேரளாவில், சோலார் பேனல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  சரிதாநாயர் ஓவ்வொரு நாளும் பரபரப்பான தகவல்களை  தனது வாக்குமூலத்தில் கூறிவருகிறார்.
 
கேரள முதலமைச்சர் உம்மண்சாண்டிக்கு சில கோடிகள் லஞ்சமாக கொடுத்ததாக கூறினார். அதன்பின், பல முக்கிய அரசியல் வி.ஐ.பி.க்கள் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர் என்றும், தனக்கு பல வாக்குறுதிகள் தந்த அவர்கள் பல இடங்களுக்கு அழைத்து சென்று தங்களது ஆசைக்கு இணங்க வைத்தனர் என்று கூறி பீதியை கிளப்பினார்.
 
மேலும், சீலிட்ட உறையில் அந்த அரசியல்வாதிகளின் பட்டியலை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளார். இதனால், சரிதா நாயருடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில், அடுத்த வெடியாக, நான் உம்மன் சாண்டிக்கும், அவரது குடும்பத்திற்கும் ஒரு அந்நியராக இருந்தது இல்லை. அவரது வீட்டில் எந்த நேரமும் நுழைவதற்கு எனக்கு சுதந்திரம் உண்டு. அது அடுத்தவரின் சமையலறையில் நுழையும் வகையலான் சுதந்திரமாகும். நான் நெருக்கமாக இருந்தேன், அதனால் அடிக்கடி அங்கு சென்றேன் என்று கொளுத்தி போட்டுள்ளார்.
 
ஆனால் வழக்கம்போல் உம்மன்சாண்டி இதையும் மறுத்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்