இந்தியாவில் முதல்முறையாக ரோபோ போலீஸ்: லஞ்சம் ஒழிய வாய்ப்பு

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (04:41 IST)
உலகம் முழுவதும் அனைத்து பணிகளிலும் ரோபோவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தியாவிலும் ரோபோக்களை பயன்படுத்தும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக உள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரோபோ சர்வர் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது

இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக போலீஸ் துறையில் ரோபோ இணைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ரோபோ ஒன்று காவல்துறையில் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

ஹெச்-பாட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ரோபோவை தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலா் ஜெயேஷ் ரஞ்சன் அறிமுகம் செய்தார். மனித உருவில் தயாராகியுள்ள இந்த ரோபோ, மனிதர்களை இனம் கண்டு அவர்கள் கொடுக்கும் புகார்களை பெற்றுக்கொள்ளும். இதில் சக்திவாய்ந்த கேமிரா, சென்சார்கள் உள்ளதால் இந்த ரோபோவை போக்குவரத்தை ஒழுங்கு செய்யவும் பயன்படுத்தலாம். இந்த ரோபோவில் விலை ரூ5 லட்சம் என்றும், இந்த ரோபோ லஞ்சம் கேட்காது என்பதால் நாட்டில் லஞ்ச ஒழிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்