உத்தர பிரதேசத்தைச் சேந்த ஒருவர், வாட்ஸ் ஆப் மூலம் தனது மனைவிக்கு மூன்று முறை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
முத்தலாக் தடை மசோதா சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்தியாவின் பல மாநிலங்களில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பல வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
குவைத் நாட்டில் வேலை செய்து வரும் இவர் மீது, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி, வரதட்சனை கேட்டு துன்புறுத்தவதாக அவரது மனைவி உத்தர பிரதேசத்தின் சிகேதா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பின்பு அந்த புகாரை வாபஸ் பெறுமாறு தன் மனைவியை மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மனைவி அந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து நேற்று வாட்ஸ் ஆப் மூலம், அவர் மனைவிக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது பற்றி சிகேதா காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். தற்போது அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.