இந்நிலையில் இன்று விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தற்போதைக்கு மீட்பு பணிகளில் தான் எங்கள் கவனம் உள்ளது. விபத்து குறித்து உயர் மட்ட குழு விரிவான விசாரணை நடத்தும். விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பின்னர் தெரியவரும். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.