இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் “டெல்லி அரசு நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியதாலேயே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஹரியானாவில் ஒரு நாளைக்கு 50 முதல் 60 ஆயிரம் தடுப்பூசிகளே செலுத்தி வருகிறோம். அதனால் எங்களுக்கு தடுப்பூசி கையிறுப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்துவதை மாநிலங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஹரியானா முதல்வர் இவ்வாறு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.