காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பாஜக அரசை கவிழ்க்க தயார்: ஜேஜேபி தலைவர் அதிரடி..!

Siva
புதன், 8 மே 2024 (18:39 IST)
ஹரியானா மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வரும் நிலையில் தற்போது பாஜக பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும் இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சியை கவிழ்க்க தயார் என்று ஜேஜேபி தலைவர் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்த போது பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜேஜேபி 10 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் என்றனர்

இதனை அடுத்து ஜேஜ பி மற்றும் சுயேட்சைகள் ஆதரவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திடீரென சுயேட்சைகள் மற்றும் ஜேஜேபி ஆதரவை வாபஸ் பெற்றதால் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க விரும்பினால் பாஜக ஆட்சியை கலைக்க தயார் என சுயேட்சைகள் துஷ்யந்த் சவுதாலா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் மற்றும் ஜேஜேபி இணைந்து ஹரியானாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்