சமூக ஊடக வளர்ச்சியால் வெறுப்புணர்வு அதிகரிப்பு- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (10:42 IST)
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மை உருவாகி உலகம் முழுவதும் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது என்று  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

இன்றைய காலத்தில், ஃபேஸ்புல், வாட்ஸ் ஆப், ஸ்னேப் ஷாட், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் உள்ளன.

உலகில் சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் மூழ்கியுள்ளனர். சிலர் அதில் வெறுப்புணர்வுணர்வை தூண்டும் வகையில் கருத்துகள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், ’’சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மை உருவாகி உலகம் முழுவதும் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. கருத்துகள் ஆராய்ந்து அறியாமல் மேலோட்டமாக பார்க்கும் இளைஞர்களின் மனப்பான்மை பெருகிவிட்டது. அதிநவீன தொழிற்நுட்பங்களை சரிவர பயன்படுத்த தவறியதன் விளைவே  இதற்குக் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்