ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ரத்தத்தை விற்பனை செய்த சிறுமி: அதிர்ச்சி தகவல்!
புதன், 19 அக்டோபர் 2022 (19:30 IST)
ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 16 வயது சிறுமி தனது இரத்தத்தை விற்பனை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஸ்மார்ட்போன் என்பது தற்போது பரவலாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக டீன் ஏஜ் மற்றும் இளைஞர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ரத்த வங்கியில் தனது இரத்தத்தை விற்க முயன்ற தகவல் வெளியாகியுள்ளது
ஆன்லைனில் 9,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்த சிறுமி, அதற்கான பணத்தை திரட்டுவதற்காக ரத்த வங்கியில் தனது ரத்தத்தை விற்கும் விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
செல்போன் வாங்குவதற்காக சிறுமி எடுத்த இந்த விபரீத முயற்சியை ரத்த வங்கியில் உள்ளவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்ததை அடுத்தே இந்த செய்தி அம்பலமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது