எல்லையை கடந்துச் சென்று பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுங்கள்: கம்பீர் கொந்தளிப்பு

திங்கள், 19 ஜூன் 2017 (14:55 IST)
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் உமர் ஃப்ரூக்விற்கு நீங்கள் ஏன் எல்லை தாண்ட கூடாது என கவுதம் கம்பீர் ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார்.


 

 
நேற்று நடைப்பெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் நாடு இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மிர்விஸ் உமர் ப்ரூக் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அணி வெற்றியை கொண்டாடுவது பற்றி பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
 
எங்கும் பட்டாசு வெடிப்பது ரம்ஜான் பண்டிகை போல உள்ளது. சிறந்த அணி வெற்றிப்பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்து இருந்தார்.
 
இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுமர் கவுமீர் ஆவேசம் அடைந்து அந்த கருத்துக்கு பதில் அளித்துள்ளார். கவுதம் கம்பீர் கூறியதாவது:-
 
மிர்விஸ் உமர் ஃபரூக்குக்கு ஒரு பரிந்துரை, நீங்கள் ஏன் எல்லை தாண்டிச் செல்லக் கூடாது. அங்கு பட்டாசு சத்தம் இன்னும் அதிகமாக கேட்குமே. அப்படியே ரம்ஜானையும் சிறப்பாகக் கொண்டாடலாம். பெட்டி, படுக்கையை பேக் செய்ய நான் உதவு செய்கிறேன் என்று கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்