இந்நிலையில், மத்திய அரசின் பதிலைக் கேட்டு கோபமடைந்த பசுமை தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார் "கங்கையை தூய்மைப்படுத்த சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறீர்கள், 2500 கீமீ நீளம் கொண்ட கங்கை நதியில் தூய்மையாக இருக்கும் ஒரே ஒரு இடத்தையாவது உங்களால் காட்ட முடியுமா? இவ்வளவு பணம் செலவு செய்தது மோசமாக இருக்கும் கங்கையை மேலும் மோசமாக மாற்றதானா?
உண்மையில் நதியை தூய்மைப்படுத்த எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக மத்திய அரசும், மாநில அரசுகளும் பொறுப்பை ஒருவர் மீது ஒருவர் சுமத்துகின்றனர். கங்கையை தூய்மைபடுத்தவது உங்களின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.