நள்ளிரவு முதல் லாரி வாடகை உயர்வு: 30% என அறிவிப்பு

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (16:16 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக மட்டும்தான் உயரவில்லை என்றாலும் ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டு விட்டது என்பதும் பல மாநிலங்களில் ரூ.90ஐ தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
5 மாநில தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என்பதும் தேர்தல் முடியும் வரை உயர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. லாரி வாடகை உயர்த்தப்படுவதால் காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்