மேலும், இப்போது நாம் எதாவது தவறுகள் செய்தால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இன்னும் சில இடங்களில் நாம் கொரொனா விலகலை நாம் கையளவில்லை; அரசி விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என எச்சரித்துள்ளார்.
நாட்டில் 31 ஆயிரம் கோடி பண உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 81 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். வரும் நவம்பர்மாதம் வரை இலவசபொருட்கள் வழங்கப்படும் , நாட்டில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது எனவும், இந்தியாவில் உள்ள கிராமங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டி ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.