பரபரப்பான நுங்கம்பாக்கம் பகுதி; வணிக வளாகத்தில் தீ விபத்து!

திங்கள், 7 மே 2018 (20:19 IST)
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

 
சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வளாகத்தின் தரைத்தளத்தில் இன்று தீப்பற்றியது. மின்கசுவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
தீவிபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனே விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மட்டுமல்லாமல் அந்த பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்