பீகார் மாநிலத்தில், புதிதாக திருத்தப்பட்ட மதுவிலக்குச் சட்டத்தில், ஒரு கிராமத்தில் ஓரிருவர் வீட்டில் மதுபாட்டில்கள் இருந்தாலும் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஹோட்டல் வைத்து நடத்துபவர்கள் மதுவிலக்கை மீறினால் அவர்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்ற விதியின் அடிப்படையில், மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 ஹோட்டல்களின் சொத்துக்களை முடக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.