மதம் மாறினால் இடஒதுக்கீடு பறிபோகும்: விரைவில் சட்டம் அமல்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:13 IST)
மதம் மாறினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைக்கும் இட ஒதுக்கீடு சலுகை பறிபோகும் என விரைவில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக கர்நாடக மாநிலத்தில் தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பின்தங்கியவர்கள் மதம் மாறினால் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாக கர்நாடக மாநில அரசில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறும் பின் தங்கிய வகுப்பினருக்கு சலுகைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிறுபான்மையாக கருதப்படுவதற்கு ஒதுக்கப்படும் சலுகைகள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துக்களாக இருக்கும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பட்டியலினத்தவர் வேறு மதங்களுக்கு மாறினாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தொஅரும் நிலை தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்