”குமாரசாமி வெட்கமே இல்லாமல் ஆட்சியை நீட்டிக்க முயல்கிறார்”…எடியூரப்பா ஆவேசம்

வெள்ளி, 19 ஜூலை 2019 (13:08 IST)
பெரும்பான்மையை இழந்துவிட்ட பிறகும் குமாரசாமி வெட்கமே இல்லாமல் ஆட்சியை நீட்டிக்க முயற்சிக்கிறார் என கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு 16 எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர். இந்நிலையில் குமாரசாமி ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது என்றும், ஆதலால் ஆட்சியை இனி தொடரமுடியாது என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று சட்டசபையை கூட்டினர். ஆனால் கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் நேற்று சட்டசபையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜனநாயகத்திற்கு அவமரியாதையை அளிக்கும் வகையில் காங்கிரஸ்- ஜனதா தளம் உறுப்பினர்கள் நடந்து கொள்கின்றனர் என்றும், சபையின் நேரத்தை விரயமாக்கி கூட்டணி அரசை காப்பாற்ற முயல்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பாஜகவிற்கு 105 எம்.எல்.ஏக்கள் இருக்க, ஜனதா தளம் கூட்டணி வெறும் 99 உறுப்பினர்கள் தான் உள்ள நிலையில், வெட்கமே இல்லாமல் குமாரசாமி ஆட்சியை நீடிக்க வழி செய்கிறார் என எடியூரப்பா ஆவேசமாக பேசியுள்ளார்.


கூட்டணி அரசின் மோசமான செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்