போதையில் காரில் சென்று போலீசுக்கு முத்த மழை பொழிந்த பெண்

வெள்ளி, 28 ஜூலை 2017 (15:14 IST)
கொல்கத்தாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்த போலீசிற்கு அந்த பெண் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் ஒருவர் இரவு நேரத்தில் விருந்தில் கலந்திகொண்டு வீடு திரும்பியுள்ளார். அந்த போதையில் காரை தாறுமாறாக ஓட்டியுள்ளார். மெட்ரோபாலிட்டன் சாலையில் அந்த பெண் வண்டியை தடுப்பு சுவர் மீது மோதியுள்ளார்.
 
அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுநர் அவரைக் காப்பற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அந்த பெண் ஓட்டுநரை பிடித்து தள்ளிவிட்டார். போலீஸ் ஒருவர் அந்த பெண்ணை காரில் இருந்து இறக்க முயற்சித்தபோது, அப்பெண் போலீஸை தன் பக்கம் இழுத்து முத்த மழை பொழிந்துள்ளார்.
 
மேலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டிய அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்