ஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து - போக்குவரத்து துறை அறிவிப்பு
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (19:44 IST)
மத்திய அரசு கடந்த ஆண்டு போக்குவரத்தில் விதி மீறினால் அதிக அபராத்தை விதித்தது. இது குறித்து கடுமையாக எதிர்புகளைத் தெரிவித்த நிலையில் அபராதம் குறித்து மாநில அரசுகளே நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது.
இந்நிலையில் இன்று கர்நாடக மாநிலப் போக்குவரத்துத் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.