காணாமல் போன குத்து ரம்யா: பாஜக காரணமா?

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (09:47 IST)
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான திவ்யா ஸ்பந்தனா. தமிழில் ரம்யா என்ற பெயரில் ‘குத்து’ என்ற படத்தில் முதன்முறையாக நடித்தார். அதனால் குத்து ரம்யா என திரையுலகில் புகழ் பெற்றார். சில காலங்கள் திரைப்படங்களில் நடித்தவர் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். கர்நாடக காங்கிரஸில் இணைந்த இவர் 2013ல் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். அதற்கு பிறகு 2014ல் நடந்த பொது தேர்தலில் தோல்வியுற்ற இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார்.

சமீபத்தில் பாஜக அமைச்சரவை பதவியேற்றபோது அமைச்சராக பதவியேற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் பலரும் திவ்யாவை விமர்சித்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த பதிவை அவர் நீக்கினார். தற்போது எந்தவித அறிவிப்புமின்றி திடீரென தனது டிவிட்டர் கணக்கைவிட்டு வெளியேறிவிட்டார் திவ்யா. காங்கிரஸார் கர்நாடகத்தில் அடைந்த தோல்வியும், தன்னை விமர்சித்ததும்தான் அவர் வெளியேற காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர் டிவிட்டரில் இருந்து காணாமல் போனதற்கு பாஜக தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. திவ்யா பாஜகவில் இணைய இருப்பதாகவும், அதனால்தான் சொல்லாமல் டிவிட்டரை விட்டு வெளியேறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்ததும் இந்த அனுமானத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் இருப்பதால் காங்கிரஸார் குழப்பத்தில் இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்