பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத ஏற்றம்: பொதுமக்கள் அவதி

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (04:03 IST)
கடந்த சில வாரங்களாகவே தினமும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.61.74ஆகவும், பெட்ரோலின் விலை ரூ.71.18ஆகவும் டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலைக்கு டீசலும், பெட்ரோல் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உயர்வும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பின்னர் பெட்ரோலின் விலை ரூ.71ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசலின் விலை இதுதான் அதிகபட்சமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து கொண்டு வருவதே பெட்ரோல் டீசலின் விலையின் ஏற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 73.89 ஆகவும், டீசல் விலை ரூ.65.23 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்