டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் போலீசார் திடீர் சோதனை

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (13:25 IST)
டெல்லியில் தலைமைச்செயலாளர், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஒருவரால் தாக்கப்பட்ட  விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சற்றுமுன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் டெல்லி போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இருப்பினும் முதல்வரின் வீட்டில் உள்ள பணியாளர்களிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டதாகவும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களிடம் எந்தவித விசாரணையும் செய்யப்படவில்லை என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் முதல்வரின் வீட்டில் இருந்து ஒருசில ஆவணங்களை போலிசார் எடுத்து சென்றதாகவும், அந்த ஆவணங்கள் குறித்த தகவல்களை அளிக்க போலீசார் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்