குறையும் கோவிஷீல்ட் தடுப்பூசி விலை?

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (08:41 IST)
கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை குறைக்க அரசு முன்வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றிற்கு 20 ஆயிரத்திற்கு அதிகமான பேருக்கு புதிதாக கொரொனா உறுதி செய்யப்படுகிறது. 
 
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகளும் அதிகமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்த 250 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. எனவே இந்த விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதாவது, ரூ.200-க்கும் கீழ் கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தடுப்பு மரிந்து தயாரிக்கும் மருத்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்