முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் ஒருமுறை சட்டமன்றத்தில் திமுகவினரால் மானபங்கப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடக்கவே இல்லை என திமுகவினர் மறுத்து வரும் நிலையில், சட்டசபையில் நடைபெற்ற கவலரம் பற்றிய அன்றைக்கு வெளியான செய்திகளின் புகைப்பட இணைப்பை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குளிர்ககால கூட்டத் தொடர் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “நிர்மலா சீதாராமன் வாட்ஸப் வரலாற்றை படித்துவிட்டு பேசுவார். ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. சட்டமன்றத்தில் அப்படி செய்ய வேண்டும் என தனது வீட்டில் அவர் ஒத்திகை பார்த்தார் என்று அவருடன் அப்போது அதிமுகவில் இருந்த திருநாவுக்கரசு அவையில் பேசியது இன்றும் அவைக் குறிப்பில் உள்ளது” என்று கூறியிருந்தார்.
இன்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் டுவிட்டர் பக்கத்தில், மேற்குறிப்பிட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அப்போதைய முன்னணி, தமிழ், ஆங்கில நாளிதழ்களில் 'சட்டசபையில் நடைபெற்ற கவலரம்' பற்றி அன்றைக்கு வெளியான செய்திகளின் புகைப்பட இணைப்பை பகிர்ந்துள்ளார்.
அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை பற்றி நான் மக்களவையில் பேசியதை விமர்சித்து — அப்போது வெளிநாட்டில் இருந்த இவர், நடக்காத சம்பவம் நடந்ததாக எப்படி கூறுகிறார், என்று கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள் என்று பதிவிட்டுள்ளார்.