டச் பண்ணாம உணவு டெலிவரி: ஐடியா மணி ஸோமேட்டோ!!

சனி, 21 மார்ச் 2020 (17:48 IST)
ஸோமேட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி புது டெலிவரி டெக்னிக்கை அறிமுகம் செய்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தொடுதல் மூலமாகவும் வைரஸ் பரவும் என கூறப்பட்டுள்ளதால்  ஸோமேட்டோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த சேவையில் ஆடர் செய்யப்பட்ட உணவை வீட்டிற்கு கொண்டு வரும் ஸோமேட்டோ டெலிவரி பாய்ஸ், வீட்டிற்கு வெளியே உணவை வைத்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து ஆடர் செய்யப்பட்ட நம்பருக்கு புகைப்படம் அனுப்புவர். 
 
இதன் பின்னர் வாடிக்கையாளர் வெளியில் வந்து உணவை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை பெற ஸோமேட்டோ ஆப்பை அப்டேட் செய்யும்படியும் கோரியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்