மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சுனில் கடம் ( 36). இவரது மனைவி பிரனாளி (33). இந்த தம்பதியர்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி ஆகிய இருவரும் மும்பை அந்தேரியில் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்த போது ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை தினமும் வீட்டில் நடந்துவந்ததால், ஒருகட்டத்தில் கணவரை கொன்றுவிட பிரனாளி திட்டம் தீட்டினார். அதன்படி சுனில் கடம் இரவு படுக்கச் சென்றது. சமையல் அறைக்குச் சென்ற பிரனாளி, அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து, சுனில் தூங்கியதும், அவரது வயிறு, கழுத்து பகுதியில் குத்தியுள்ளார்.
அதன் பின்னர், அவரது பெற்றோரிடம் சென்று, சுனில் தன்னைத் தானே கத்தியில் குத்திக்கொண்டார் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீஸிக்கு தகவல் அளித்தனர். பின்னர் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அதில் 11 இடங்களில் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் பிரனாளியிடம் விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரைக் கைது செய்து மேலும் விசாரித்து வருவதாகத தகவல்கள் வெளியாகிவருகிறது.