கல்லூரி மாணவிகளை அறைக்குள் வைத்து பூட்டிய பெண் முதல்வர்: பதவிநீக்கம் செய்த அமைச்சர்..!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:38 IST)
போராட்டம் செய்த கல்லூரி மாணவிகளை அறைக்குள் வைத்து பூட்டிய பெண் முதல்வரை டிஸ்மிஸ் செய்து அமைச்சர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் உள்ள அரசு கலை கல்லூரியில் முதல்வராக ரெமா என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் மிகவும் மாணவ மாணவிகளிடம் கண்டிப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் மிகவும் மோசமாக இருப்பதாக கூறி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டம் செய்த மாணவ மாணவிகளை ஒரு அறைக்குள் வைத்து பூட்டி வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து அடைத்து வைக்கப்பட்ட அறையில் இருந்து வெளியே வர முடியாத மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர் 
 
இந்த வீடியோ வைரலானதை அடுத்து கேரளா உயர் கல்வித்துறை அமைச்சர் பெண் முதல்வரை டிஸ்மிஸ் செய்தார் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்