முதல் மதிப்பெண் மாணவன் அதிரடி முடிவு: ஜெயின் மதம் மாறி துறவியாக உள்ளார்!

வியாழன், 8 ஜூன் 2017 (13:13 IST)
குஜராத் மாநிலம் சூரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் ஜெயின் மதத்தில் சேர்ந்து துறவறம் மேற்கொள்ள இருப்பதாக வித்தியாசமான முடிவை அறிவித்துள்ளார்.


 
 
சூரத்தைச் சேர்ந்த வர்ஷில் ஷா என்ற 17 வயது மணவன் தற்போது நடந்து முடிந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் 99 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தில் வந்தார். பொதுவாக முதல் மதிப்பெண் அல்லது அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் படிக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவிப்பார்கள்.
 
ஆனால் முதல் மதிப்பெண் பெற்ற வர்ஷில் ஷா ஜெயின் மதத்தில் சேர்ந்து விரைவில் துறவறம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த மாணவன் கூறும்போது, சிறுவயதிலிருந்தே ஜெயின் மதத்தைச் சேர்ந்த ஸ்ரீ கல்யாண்ரத்னா விஜய் ஜி மகாராஜின் போதனைகளை கேட்டு வந்தேன்.
 
அவரையே என்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டேன். அவரது போதனைகள் எனக்கு மன அமைதியை கொடுத்தது. ஆகையால் அவரின் தீட்சைப்பெற்று ஜெயின் மதத்தில் இணைய திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்தார். இன்று முதல் மாணவன் வர்ஷில் ஷா ஜெயின் மதத்தில் இணைந்து அவரது குருவின் போதனைகளை போதிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்