பெகாசஸ் மென்பொருளை சந்திரபாபு நாயுடு வாங்கினார்: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு!
வெள்ளி, 18 மார்ச் 2022 (07:45 IST)
பெகாசஸ் மென்பொருளை சந்திரபாபு நாயுடு வாங்கினார்: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு!
உளவு பார்க்கும் மென்பொருளான பெகாசஸ் மென்பொருளை முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கினார் என்ற தகவலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருளை மத்திய அரசு வாங்கி முக்கிய பிரபலங்களின் செல்போன்களை ஒட்டு கேட்டதாக கூறப்பட்ட தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி ஒன்றில் கூறியபோது பெகாசஸ் உளவு மென்பொருளை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு வங்க அரசுக்கு விற்க தீவிர முயற்சிகள் நடந்தன என்றும் ஆனால் நான் தான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என்றும் கூறினார்
ஆனால் அதே நேரத்தில் அப்போது ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அந்த மென்பொருளை வாங்கினார் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது