எச்சரிக்கை! - ஒரு சில நாட்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

புதன், 23 நவம்பர் 2016 (11:36 IST)
இன்னும் ஒருசில நாட்களில் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் சிரமம் நீடித்து வருவகிறது.

மேலும், புதிய நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் விடப்படாததால், பணப் புழக்கமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், நிச்சயம் பணத் தட்டுப்பாடு ஏற்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “வங்கிகளுக்கு போதுமான அளவில் பண விநியோகம் செய்வதற்கு, ரிசர்வ் வங்கியிடமும், போதிய இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் அச்சடிப்பதிலும் கால தாமதம் ஏற்படலாம்.

இதனால், இன்னும் நாட்களில் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. மேலும், ஏற்கனவே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியவர்கள் கையிருப்பு குறித்த அச்சத்தில் வெளியில் புழக்கத்தில் விடாமல் சேமித்து வைத்துள்ளனர். இதுவும் ஒரு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்