வேளாண் மசோதாவில் மாற்றம்? சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட மத்திய அரசு முடிவு !

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (13:54 IST)
சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வேளாண் மசோதாவிற்கு எதிராக டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் ஆரம்பித்த இந்த போராட்டத்திற்கு தற்போது தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளான கனடா, இங்கிலாந்த், லண்டன் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆதரவு குவிந்துள்ளது. எனவே, புதிய வேளாண் சட்டங்களில் மாற்றம் செய்வது தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்