தன்பாலின திருமணங்கள் செல்லாது; மத்திய அரசு புதிய விளக்கம்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (08:52 IST)
இந்தியாவில் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தன்பாலின் திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதில் இந்திய நாட்டின் சட்ட அமைப்பு மற்றும் சமூகம் ஆகியவை ஒரே பாலின தம்பதியரை அனுமதிப்பதில்லை. இதனால் இந்த உறவுமுறையை திருமணமாக அங்கீகரிக்க முடியாது என்று கூறியுள்ளது.

மேலும் தண்டனை மற்றும் நிவாரணம் வழங்குவதில் ஆண், பெண் சார்பான வேற்றுமைகள் திருமண சட்டத்தில் உள்ளது. அப்படியிருக்க தன்பாலின திருமணங்களில் யார் கணவன்? யார் மனைவி? என்று எப்படி அங்கீகரிப்பது என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. முன்னதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தன்பாலின உறவுகள் குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், அதை திருமணமாக அங்கீகரிப்பது குறித்து எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்