எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி: மத்திய அரசு திட்டம்!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (07:45 IST)
எண்ணெய் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் அந்நிறுவனம் இயங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சகம் 20 ஆயிரம் கோடி இழப்பீடு கோரிய நிலையில் நிதியமைச்சகம் 20 ஆயிரம் கோடி ரூபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
அதேபோல் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த 20,000 கோடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்