டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகள் !

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (10:01 IST)
டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.  
 
இந்நிலையில் அடுத்து மூன்றாவது அலை வரும் என எச்சரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால் அதேசமயம் தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்