சிபிஎஸ்இ 10-ம் வகுப்புஆங்கில பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 2 கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 5-ம் தேதி சிபிஎஸ்இக்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின. இதில் கடந்த மாதம் 10-ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வு நடந்தது. அந்த தேர்வுக்கான வினாத்தாளில் குறிப்பிட்ட ஒரு கேள்வியில் அச்சுப்பிழை இருந்தது.
இது குறித்து ஆசிரியர்களும், மாணவர்களும் சிபிஎஸ்இ வாரியத்துக்கு புகார் கொடுத்தனர். இதனையடுத்து, சிபிஎஸ்இ வாரியம் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் 2 கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்தது.