விபத்தில் தூக்கிவீசப்பட்ட உடலை 3 கி.மீ இழுத்துச் சென்ற கார்
புதன், 21 செப்டம்பர் 2016 (15:20 IST)
தெலங்கானாவில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது கார் மோதியதில் அவர் காரின் மேற்கூரையில் தூக்கி வீசப்பட்டார். அதோடு 3 கி.மீ தூரம் சென்ற பின்னரே கார் நின்றது. வழிந்தோடிய ரத்தத்தோடு அவரின் உடலை 3 கி.மீ துரம் கார் இழுத்துச் சென்றது.
தெலங்கானா மாநிலம் மெகபூர் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு(38) என்பவர் பேருந்து நிலையத்திற்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.
அதில் அவரின் உடல் காரின் மேற்கூரையில் தூக்கி வீசப்பட்டது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஆனால் கார் நிற்காமல் அவரின் உடலோடு சென்றது.
3 கி.மீ தூரம் சென்ற பின்னர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். உள்ளுர் கிராம மக்களும், காவல்துறையினரும் விரட்டியும் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை பிடிக்க முடியவில்லை.