இன்ஸ்டாகிராம் ரீலுக்காக கார் ஓட்டியபடி வீடியோ.. விபத்தில் தாய், மகன் உள்பட 4 பேர் பரிதாப பலி..!

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:47 IST)
இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ எடுப்பதற்காக கார் ஓட்டிய போது வீடியோ எடுத்த நிலையில் கார் விபத்தில் சிக்கி தாய் மகன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் காரில் வேகமாக செல்வதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய முடிவு செய்தனர். அப்போது அவர்கள்  காரை ஓட்டிக் கொண்டே வீடியோ எடுத்த போது  ரோட்டை கடந்து சென்ற தாய் மகன் ஆகிய இருவர் மீது கார் வேகமாக மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிர் இழந்தனர். 
 
அதுமட்டுமின்றி  அந்த கார் மேலும் சிலரை ஏற்றிய நிலையில் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் அதிவேகமாக காரை ஓட்டிய இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்