18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பதிவான வாக்குகள் வரும் ஜீன் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியானது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக இந்திய விமானப்படை விமானத்தில் பிரதமர் மோடி வந்தார். ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கு விமானப்படைக்கு பாஜக பணம் செலுத்தியதா? ஆம் என்றால் அனைத்து வேட்பாளர்களும் ராணுவ ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்க முடியுமா? என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.