குளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து ; 50 பேர் பலி : பீகாரில் பரிதாபம்

திங்கள், 19 செப்டம்பர் 2016 (20:17 IST)
பீகாரில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று குளத்தில் பாய்ந்ததில் 50 பேருக்கும் மேல் பலியாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
பீகார் மாநிலம், சித்தமார்கியில் இருந்து மதுபானி என்ற இடத்திற்கு சென்று 55 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரெனெ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பேருந்து சாலையின் ஓரத்திலிருந்த குளத்தில் பாய்ந்தது.
 
25 அடி குளத்தில் பேருந்து கவிழ்ந்ததால் அதிலிருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை சிலரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. 
 
இதுபற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனாலும் அவர்கள் தாமதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த பொதுமக்களுக்கும், மீட்பு பணியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாய் தெரிகிறது. 
 
அதன்பின் பொதுமக்கள், அவர்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பணி நடந்து வருகிறது. 
 
இந்த விபத்தில் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என பீகார் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்