போதிய விளைச்சல் இல்லாமல், அப்படியே விளைந்தாலும் விளைந்த பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வங்கிக்கடனையும், மற்றவர்களிடம் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து வரும் நிலையில் விவசாயிகள் தாங்கள் செய்யும் விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி கட்ட வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேப்ராய் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
சமீபத்தில் பட்ஜெட் செய்தபோது மத்திய நிதிஉஅமைச்சர் அருண்ஜெட்லி, 'விவசாய வருமானத்தின் மீது வரி விதிக்கும் திட்டம் இல்லை' என்று கூறியிருந்த நிலையில் தற்போது விவேக் தேப்ராய் விவசாயம் மூலம் வரும் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது.