குமாரசாமிக்கு தூது விடுகிறதா பாஜக? குதிரை பேரம் ஆரம்பமா?

Webdunia
சனி, 13 மே 2023 (15:10 IST)
கர்நாடக மாநில தேர்தலில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து விட்ட நிலையில் குறுக்கு வழியில் ஆட்சி எப்படி பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை 139 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 62 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா கட்சி 20 தொகுதிகளிலும் மற்றவை மூன்று தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 
 
மத சார்பற்ற ஜனதா கட்சி மற்றும் மற்றவை எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தால் 89 தொகுதிகள் வரை கிடைக்கும். ஆட்சி அமைக்க அதன் பிறகும் 27 தொகுதிகள் தேவை என்பதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு அணியை உடைக்க பாஜக திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது. 
 
எனவே இப்போதே குதிரை பேரம் தொடங்கி விட்டதாகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை இழுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்