மம்தா பானர்ஜிக்கு காயம் எப்படி ஏற்பட்டது? விசாரணைக்கு உத்தரவிட பாஜக தலைவர் கோரிக்கை..!

Mahendran

வெள்ளி, 15 மார்ச் 2024 (19:08 IST)
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு இன்று நெற்றியில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என மேற்கு வங்க பாரதிய ஜனதா தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மேற்குவங்க பாஜக பிரமுகர் சுகந்தா மஜூம்தார் கூறியபோது, ‘மம்தா பானர்ஜிக்கும், எங்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர் எங்கள் முதல்வர், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அதே நேரத்தில் அவரை பின்னால் இருந்து யாரோ தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது, பின்னால் தள்ளி விட்டது போல் உணர்ந்தேன் என்று அவரே கூறியுள்ளார்

இது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேண்டிய விஷயம். முதல்வர் பாதுகாப்பில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்ததா? உள்துறை அமைச்சகம் விழிப்புடன் இருந்ததா? தேவைப்பட்டால் மம்தா பானர்ஜியை வேறு வீட்டிற்கு மாற்ற வேண்டுமா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

மம்தா பானர்ஜியின் உடல்நிலை குறித்து பாஜக அக்கறையுடன் விசாரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்