பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே மதவாத கருத்துக்கள் மக்களிடம் திணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. யோகாவை அனைத்து பள்ளிகளிலும் திணிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் பகவத்கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி.ரமேஷ்பிதுரி என்பவர் பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.