ஹேக்கர்கள் கண்டுபிடித்த இந்த செர்பெரஸ் வைரஸ் ஒரு குறுந்தகவலை ஸ்மார்ட் போனுக்கு அனுப்பும் என்றும், அந்த குறுந்தகவலில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால் உடனே அந்த செல்போனில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளில் புகுந்து அதிலுள்ள தகவல்களை திருடி விடும் என்றும், அதன் பின்னர் ஒவ்வொரு முறை வங்கிக் கணக்கை பயன்படுத்தும்போது முறைகேடாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது ஏன்றும் ஏற்கனவே இந்த வைரஸால் பலர் ஏமாந்து உள்ளதாகவும் சர்வதேச போலீஸ் எச்சரித்துள்ளது.
எனவே தேவையில்லாமல் வரும் குறுந்தகவலில் வரும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும் என்றும் அனைத்து நாடுகளின் அரசுகளுக்கு சர்வதேச போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா வைரசை விட படு மோசமாக இந்த வைரஸ் பரவி வருவதாகவும் இது அனைத்து நாடுகளும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் சர்வதேச போலீசார் தெரிவித்துள்ளனர்