சர்ச்சைக்குரிய நிலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும்! – உச்சநீதிமன்றம்!

சனி, 9 நவம்பர் 2019 (12:03 IST)
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தி நில பிரச்சினையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் 3 மாதங்களுக்குள் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் எந்த அமைப்புக்கும் சொந்தமானது இல்லை என்றும், அரசின் கட்டுப்பாட்டிலேயே அந்த நிலம் மற்றும் ராமர் கோவில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் எந்த அமைப்பையும் சாராத நடுநிலையான தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளதாக பலர் பாராட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்