அதிசயம்....300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு !

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (20:05 IST)
மஹாராஷ்டிர மாநிலம் கல்வானில் , 300 அடி ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன்  விழுந்ததுவிட்டான். பின், அங்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், திருச்சி நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சுர்ஜித் வில்சன் என்ற இரண்டு வயதுச் சிறுவன், தனது வீட்டில், மூடி வைக்காமல் இருந்த ஆழ்துளை கிணற்றி விழுந்தான். அவனை மீட்க இரவும் - பகலாக பல நாட்கள்  போராடியும் அவனை உயிருடன் மீட்க முடியவில்லை. 
 
தீயணைப்புத்துறை, பேரிடன் மேலாண்மை குழுவினர், என பலரும் இந்த முயற்சியில் இறங்கியும், அங்குள்ள கடுமையான மண்ணினால் சுர்ஜித் விழுந்த இடத்தில் இருந்து ஒரு இன்னொரு குழி தோண்டி அவனை மீட்கும் முயற்சி தாமதம் ஆனதால்,சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
 
இந்த சம்பவம் தமிழர்களை வேதனையில் ஆழ்த்தியது, விண்ணில் ராக்கெட் அனுப்புவதுவது போல் இந்த மண்ணுக்குள் கருவிகள்  செல்ல கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்துவருகின்றனர்.
 
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் கல்வான் அருகே உள்ள நாசிக் மாவட்டத்தில் 6 வயது சிறுவன் , 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததுவிட்டான். பின், அங்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.தற்போது சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறுவன் நலமுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்